மாமியார் வீட்டுக்கு வந்த வாலிபருக்கு கத்தியால் வெட்டு

மாமியார் வீட்டுக்கு வந்த வாலிபரை மனைவியின் தம்பி கத்தியால் வெட்டியுள்ளார்.
மாமியார் வீட்டுக்கு வந்த வாலிபருக்கு கத்தியால் வெட்டு
Published on

வியாசர்பாடி, 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கண்னிகை பேர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 28). டிரைவரான இவர், சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 29-வது தெருவில் வசித்து வரும் யாஸ்மின் என்பவருடைய மகள் ஜீனத் நிஷா என்பவரை திருமணம் செய்து உள்ளார்.

தற்போது ஜீனத் நிஷா, வியாசர்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனைவியை பார்ப்பதற்காக யுவராஜ் மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது ஜீனத் நிஷாவின் தம்பி அப்துல்லா (26) தனக்கு டீ தரும்படி கேட்டார். அதன்படி ஜீனத் நிஷா, தம்பிக்கு டீ போட்டு கொடுத்தார்.

இதனால் யுவராஜ், "எனக்கு முதலில் டீயை கொடுக்காமல் உன் தம்பிக்கு கொடுக்கிறாயே?" என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அப்துல்லா, சமையலறையில் இருந்த கத்தியால் யுவராஜ் தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்லாவை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com