மதுக்கடையை ஆய்வு செய்த சி.வி.சண்முகம்; சாகும் வரை குடிப்போம் என முழங்கிய மதுப்பிரியர்களால் பரபரப்பு

அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடையை ஆய்வு செய்த சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
Published on

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே மதுக்கடையை ஆய்வு செய்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடுவனந்தல் புதூரில் ஆக.18-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, அங்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுக்கடை திறப்புக்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி சண்முகம் நேற்று நடுவனந்தல் கிராமத்துக்குச் சென்று, மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: -

கிராமங்கள் நிறைந்த நடுவனந்தல் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் பேசியுள்ளேன். டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கைக்காக 5 நாள்கள் காத்திருப்போம். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று சி.வி.சண்முகம். கூறினார்.

இந்நிலையில், மதுக்கடை முன் திரண்ட அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து "சாகும் வரை குடிப்போம்" என சிலர் முழக்கமிட்டதால் பரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com