ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பு மரியாதை

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பு மரியாதை
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்து முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று விட்டார்.

இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தோடு களமிறங்கிய அ.தி.மு.க. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுமட்டுமின்றி அந்த கட்சி 3-வது இடத்தை பிடித்ததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் சட்டசபையில் இழந்தது.

இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சட்டசபை தலைவராகவும் எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அதிமுக சட்டமன்ற தலைவராக எங்களை நியமிக்க வேண்டும் பெரும் ஆதரவு எங்களுக்கு தான் உண்டு என்று சபாநாயகரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்தநிலையில், அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி அணியினர் மெரினாவில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடனான சந்திப்பு நிறைவடைந்த நிலையில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com