சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் - முதன்மைச் செயலாளர் தகவல்

தலைமைச் செயலகத்திலுள்ள பேரவைத் தலைவரின் அறையில் சி.வி.சண்முகம் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் - முதன்மைச் செயலாளர் தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் பதவியேற்கவில்லை. சி.வி. சண்முகம் அவைக்கு வந்தபோதும் பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் சி.வி.சண்முகம் தலைமை செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தின் முதன்மைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மயிலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி.சண்முகம், தற்காலிக பேரவைத் தலைவர் முன்னிலையில், இன்று (11.5.2026) பிற்பகல் 3.15 மணி அளவில், சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள, பேரவைத் தலைவரின் அறையில், இந்திய அரசமைப்பில் உள்ளவாறு, சட்டமன்றப் பேரவை உறுப்பினருக்கான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com