

சென்னை,
வங்கக்கடலில் நாளை 'அக்வான்' புயல் உருவாவதால் மீனவர்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்ட லமாகவும் வலுவடைந்து, பின்னர் நாளை (திங்கட்கிழமை) புயலாகவும் உருவெடுக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாகவும் வலுவடைகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் அரேபிய மற்றும் பசிபிக் பெருங்கடல் உயர் அழுத்தம் காரணமாக ஒரே இடத்தில் மையம் கொண்டு பிறகு வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து 18-ந்தேதி (புதன்கிழமை) முதல் தமிழகத்தை நோக்கி திரும்புவதற்கு சாதகமான சூழல் இருப்பதாகவும்,
அவ்வாறு தமிழகத்தை நோக்கி இந்த 'அக்வான்' புயல் திரும்பும் பட்சத்தில் சென்னை எண்ணூர்-கடலூர் இடையே 19-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு முதல் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
'அக்வான்' புயல் காரணமாக ஒட்டுமொத்தமாக வடதமிழக பகுதிகளில் 18, 19, 20-ந் தேதிகளில் கனமழை இருக்கும் என்றும், 19-ந்தேதி தீவிர மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புயல் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட் டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புயல் சின்னத்தைத் தொடர்ந்து, இந்தியக் கடலோரக் காவல்ப டையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் எந்த நேரத்திலும் மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் தயார்நிலையில் வைக்கப் பட்டுள்ளன. கடலோரக் காவல்படையின் ரேடார் நிலையங்கள் வானிலை மாற்றங்களை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசக் கடற்கரைப் பகுதிகளில் அவசரகாலச் சூழல்களை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.