மோக்கா புயல் - மீனவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை

வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்
மோக்கா புயல் - மீனவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை
Published on

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. "புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்தது. மோக்கா என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14-ம் தேதி வங்காள தேசம் - வடக்கு மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மோக்கா புயல் காரணமாக மீனவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ததுறை அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com