

சென்னை,
ஆந்திராவில் ‘முரசு’ புயல் கரையைக் கடந்தது... பலத்த காற்று வீசியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய 'முரசு' புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணி அள வில் தீவிர புயலாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசை யில் நகர்ந்து நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவியது.
மேலும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டது. இந்த புயல் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. அப்போது ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் நகரில் கனமழை பெய்தது. ஓங்கோல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது. ஆந்திராவின் சிராலா பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடலோர பகுதிகளில், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. தொடர்ந்து புயலின் கண்பகுதி, ஓங்கோல் நகர கடற்பகுதியை கடந்து வந்தது. இதனால், ஓங்கோல் உள்ளிட்ட தெற்கு ஆந்திரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புதுச்சேரியில் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், தீவிர புயலான 'முரசு' ஆந்திராவின் நெல்லூர்-நர்சாபூர் இடையே கரையைக் கடந்தது. இன்று காலை 03:30 மணி முதல் 05:30 மணிக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில், ஒங்கோலுக்கு அருகில் (சுமார் 15.53° வடக்கு அட்சரேகை மற்றும் 80.22° கிழக்கு தீர்க்கரேகை பகுதியில்) கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ ஆகவும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.