

காசிமேடு,
வங்காள விரிகுடா கடல் பகுதியில் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் அனைத்து விசைப்படகுகளும் உடனடியாக கரை திரும்ப வேண்டும். வருகிற 29-ந்தேதி வரை மீன்பிடித் தொழிலை முற்றிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலோரப் பகுதிகளில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு வருகிறது. விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.