மாணவர்களுக்கு சிலம்ப போட்டி

மாணவர்களுக்கு சிலம்ப போட்டி நடந்தது.
மாணவர்களுக்கு சிலம்ப போட்டி
Published on: 

சிவகங்கை மாவட்ட நேரு இளைஞர் மையம், மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளர்ச்சி கழகத்தின் சார்பில் சாகச நிகழ்ச்சிகள் கொல்லங்குடி கிராமத்தில் நேரு இளைஞர்மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மகேந்திரன், திரைப்பட நடிகர் குட்டிமணி, தொலைக்காட்சி தொகுப்பாளர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளர்ச்சி கழகத்தின் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு நடனம், பாட்டு, இசை, ஓவியம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்சிகளை நிகழ்த்தினர். இதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் கலைச்செல்வம் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com