தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

100 நாள் வேலை வேண்டும்

பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் கிராம ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் 1,520 குடும்பங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை திட்டத்தில் அகழிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கி நடைப்பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக செங்குணம் ஊராட்சியில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குமார் அய்யாவு, செங்குணம்.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் ஏ.ஈ.ஓ. அலுவலகம் செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்துச்செல்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குரங்குகள் கடிக்க பாய்வதினால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com