தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

 கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தியாகராஜன், மீன்சுருட்டி.

விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் புளியமரம்

அரியலூர் மாவட்டம், குறிச்சி நத்தம் தென்புற பகுதியில் அரியலூர்-ஜெயங்கெண்டம் செல்லும் சாலையில் பழமையான பட்டு போன புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த மரம் காற்றில் பயங்கரமாக ஆடி வருகிறது. இந்த முறிந்து ஏதாவது வாகனங்களில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பட்டுபோன புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com