தினமும் நிலையில்லாத சூழல்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.464 குறைவு ஒரு பவுன் ரூ.35,728-க்கு விற்பனை

தங்கம் விலை தினமும் நிலையில்லாத சூழலில் இருக்கிறது. நேற்று பவுனுக்கு ரூ.464 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.35 ஆயிரத்து 728-க்கு விற்பனை ஆனது.
தினமும் நிலையில்லாத சூழல்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.464 குறைவு ஒரு பவுன் ரூ.35,728-க்கு விற்பனை
Published on

சென்னை,

தங்கத்துக்கு கலால் வரி குறைக்கப்படுவதாக கடந்த 1-ந் தேதி நடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அதற்கு மறுநாளில் (2-ந் தேதி) இருந்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விலை குறைந்து காணப்பட்டது.

பின்னர் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.576 அதிரடியாக உயர்ந்து, மறுநாளே மீண்டும் குறைந்தது. இவ்வாறாக தங்கம் விலை தினமும் நிலையில்லாத சூழலில் காணப்படுகிறது. அந்தவகையில் நேற்றுமுன்தினம் விலை உயர்ந்த நிலையில் நேற்று குறைந்து இருந்தது.

பவுனுக்கு ரூ.464 குறைவு

நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 524-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 192-க்கும் தங்கம் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.58-ம், பவுனுக்கு ரூ.464-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 466-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 728-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் குறைந்திருந்தது. கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் 73 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.73 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com