தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு 'ஜேப்பியார் ஐகான்' விருது

2026-ம் ஆண்டுக்கான 'ஜேப்பியார் ஐகான்' விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது
தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு 'ஜேப்பியார் ஐகான்' விருது
Published on

சென்னை,

2026-ம் ஆண்டுக்கான 'ஜேப்பியார் ஐகான்' விருதுகள் வழங்கும் விழா, சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

விழாவுக்கு ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ரெஜினா ஜே.முரளி, தலைவர் முரளி சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

விழாவில், மாற்றத்தை நோக்கிய தலைமைத்துவத்திற்கான ஜெனித் ஐகான் விருது வி.எம்.முரளிதரனுக்கும், மனிதநேய ஐகான் விருது ஆதித்யாராமுக்கும், மக்கள் குரலின் பாதுகாவலர் விருது தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தனுக்கும், எவர்கிரீன் ஐகான் விருது நடிகை சிம்ரனுக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல், பாடகர் உன்னி கிருஷ்ணன், இதழியலாளர் தன்யா ராஜேந்திரன், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை பேச்சாளர் அலெக்சாண்டர் பாபு, ' டிராகன்' பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, முரளி நாராயணராவ் ஆகியோரும் துறை சார்ந்த விருதுகளை பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com