பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாட்டுக்கடன்

பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாட்டுக்கடன் வழங்கப்பட்டது.
பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாட்டுக்கடன்
Published on

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்திய கறவை மாட்டுக்கடன் லோன் மேளா பூலாம்பாடி பேரூராட்சியில் நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் 50 பருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் கறவை மாட்டுக்கடன் வழங்கப்பட்டது. விழாவிற்கு கவுரவ விருந்தினராக டத்தோ எஸ்.பிரகதீஷ் குமார் கலந்து கொண்டார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சை மண்டல மேலாளர் நாகேஸ்வர ராவ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் பால்வளத்துறையின் கூட்டுறவு சார் பதிவாளர் த.செந்தில் துறையின் நலத்திட்டங்கள், கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சியில் ஆவின் நிறுவனத்தின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கே.ராமசாமி, பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, சங்க பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க செயலர் பி.சத்தியன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com