பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்காக குவிந்த கறவை மாடுகள்

பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்காக கறவை மாடுகள் குவிந்தன.
பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்காக குவிந்த கறவை மாடுகள்
Published on

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சியில் நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பசுகள், கறவை மாடுகள், இளம்கன்றுகள், உயர்ரக கறவை மாடுகள், சினை மாடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வந்தன.

கறவை மாடுகள் மற்றும் சினை மாடுகளை வாங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சித்தூர், பலமநேர் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் கறவை மாடுகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை விற்பனையானது. 1500-க்கும் மேற்பட்ட காளைமாடுகள், சினை மாடுகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் விவசாயிகள் பயிரிடப்படும் காய் மற்றும் கனிகள் இரவு 9 மணி வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டன .இதனால் நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ.2 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com