

சென்னை,
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அணைகளுக்கு விரிவான அணை பாதுகாப்பு மதிப்பீடு மேற்கொள்வதற்காக நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த மதிப்பீட்டு பணிக்கான மொத்த செலவு ரூ.1.20 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பாதுகாப்பு மதிப்பீடு நடைபெற இருக்கிறது. மொத்தம் 86 அணைகளுக்கு விரைவான அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக்காக நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.