வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1.600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் 2-வது யூனிட்டில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com