வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு மற்றும் பராமரிப்புப் பணி காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

சென்னை,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அனல்மின் நிலையத்தில் இரண்டாவது நிலையின் இரு அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் பராமரிப்புப் பணி காரணமாக 1200 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com