வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், 2-வது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் கொதிகலன் குழாய் கசிவால் முதல் யூனிட்டின் 3-வது அலகில் 210 மெகாவாட்டும், 2-வது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அலகுகளில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com