நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

நெல்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
Published on

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளை ஒட்டிய பகுதியாக உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி பயிர்களையே பயிரிட்டு வருகின்றனர். இவ்வாறு பயிரிடப்படும் நேரங்களில் காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அவ்வப்போது நிகழ்ந்த வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த தவமணி என்பவரது வயலில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. இதே போல் ஆரியபட்டி கண்மாய் ஓரத்தில் உள்ள சுமார் 25 முதல் 30 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளது. மேலும், நல்லிவீரன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவரது தோட்டத்தில் 4 ஏக்கர் கடலை பயிர்களையும், பிச்சையம்மாள் என்பவரது தோட்டத்தில் பருத்தி செடிகளையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com