லாரி மோதி கோவில் சுவர் சேதம்

லாரி மோதி கோவில் சுவர் சேதம் அடைந்தது.
லாரி மோதி கோவில் சுவர் சேதம்
Published on

மேலூர் விளாப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் வினோத் (வயது 26), லாரி டிரைவர். இவர் மதுரையில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு இலுப்பூர் வந்துள்ளார். அப்போது இலுப்பூர் மேலப்பட்டி நகர் பழனியாண்டவர் கோவில் நுழைவு வாயில் சுவற்றில் லாரி மோதியதில் சுவர் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எம்.குரும்பட்டியை சேர்ந்த செல்வம் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் டிரைவர் வினோத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com