சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்

நாகூர் பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்
Published on

நாகூர்:

மின்கம்பம் சேதம்

நாகூரில் சிவன் மேல மடவிளாகம் தெரு உள்ளது. இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவானது சிவன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய தெருக்களுக்கு சென்று வரக்கூடியதாகும். இந்த தெருவில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்த சிவன் மேல மடவிளாகம் தெரு சாலையோரத்தில் உள்ள ஒரு மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. மின் கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்தநேரத்திலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதனால் அந்த வழியாக செல்பவர்கள் ஏதேனும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்துதர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com