தேவகோட்டை அருகே-அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சேதமடைந்த சாலை

தேவகோட்டை அருகே அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சாலை சேதமடைந்தது.
தேவகோட்டை அருகே-அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சேதமடைந்த சாலை
Published on

தேவகோட்டை

தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் ஊராட்சியில் மதுரை-தொண்டி வழியாக ஆந்தகுடி-விளங்காட்டூர் சாலை பிரதம மந்திரி திட்டத்தில் அமைக்கப்பட்டது. இந்த சாலை மிகவும் மோசமாகவும், சாலையை சரியாக அமைக்கவில்லை என்றும் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் இந்த சாலை சேதமடைந்தது. சாலையில் பள்ளம் ஏறபட்டும், ஜல்லிகள் அரித்தும் காணப்படுகிறது. சாலை அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சேதம் அடைந்து விட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து, தரமான சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com