

கோவை ,
நீர் சேமிப்புக்கு அணைகள் மட்டுமே தீர்வல்ல: உலகின் மிகப்பெரிய அணையானமண்ணின் வளத்தை மே ம்படுத்த வேண்டும்! நாட்டின் நீர் இருப்பு சரிவை சுட்டிக்காட்டி சத்குரு வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ள நிலையில், “அதிக நீரை சேமிக்க மேலும் பல அணைகளை கட்டுவது மட்டுமே தீர்வல்ல. இந்த பூமியிலேயே மிகப்பெரிய அணையாக இருக்கும் மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்.
சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, இந்தியாவில் உள்ள 178 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு அதன் மொத்தக்கொள்ளளவில் 70 சதவதீமாக குறைந்துள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, இது கடந்த பத்தாண்டுகளில் பதிவான மிக குறைந்த அளவாகும். கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பு 76.62 சதவதீமாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 79 சதவதீமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, பருவமழை பற்றாக்குறை காரணமாக தென்னிந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 87.25 சதவதீமாக இருந்த தென்னிந்திய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, தற்போது 50 சதவதீமாக சரிந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உண்மையான நீர்வளம் நமது காலடிக்கு கீழேயே இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாக சேர்த்தால் கிடைக்கும் நீரின் அளவை விட 800 சதவீதம் அதிக நீரைத்தேக்கி வைக்கும் திறன் மண்ணுக்கு உண்டு.
ஆனால், இந்த திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென்றால், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கும் மரங்கள், புதர்கள், கோடைகால பயிர்கள், நிலத்தை மூடியிருக்கும் தாவரங்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். அதிக நீரை சேமிக்க மேலும் பல அணைகளை கட்டுவது மட்டுமே தீர்வல்ல. இந்த பூமியிலேயே மிகப்பெரிய அணை மண்தான்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.