புத்தக திருவிழாவில் நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு


புத்தக திருவிழாவில் நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
x
தினத்தந்தி 23 Feb 2025 4:47 AM IST (Updated: 23 Feb 2025 7:00 AM IST)
t-max-icont-min-icon

புத்தக திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சி நடன கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனக்கலைஞரும், நடன ஆசிரியருமான சிவகங்கை அகிலாண்டபுரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (வயது 53) என்பவர் நடனமாடினார்.

அப்போது அவர் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேஷ்கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story