சேதமடைந்த குடிநீர் தொட்டியால் காத்திருக்கும் ஆபத்து

சேதமடைந்த குடிநீர் தொட்டியால் காத்திருக்கும் ஆபத்து
சேதமடைந்த குடிநீர் தொட்டியால் காத்திருக்கும் ஆபத்து
Published on

தொண்டி

திருவாடானை யூனியன் கருமொழி கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து கருமொழி, வீராப்புலி, கருமொழி காலனி குடியிருப்பு பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது சேதமடைந்து விட்டது. சாலையோரம் உள்ள இந்த குடிநீர் தொட்டியை மாற்று இடத்தில் கட்டுவதற்கு குடிநீர் வாரியத்திற்கு இழப்பீட்டு தொகையை நெடுஞ்சாலைத்துறை வழங்கி விட்டதாக தெரிகிறது. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் குடிநீர் தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. சேதமடைந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் சிக்கல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக சாலையோரம் ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இதற்கு பதிலாக புதிய குடிநீர் தொட்டி கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருமொழி ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com