தர்கா கந்தூரி விழா

கள்ளிமேடு தர்கா கந்தூரி விழா நடந்தது.
தர்கா கந்தூரி விழா
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு காதர் மீரான் ஒலி தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மத நல்லிணக்க விழாவாக நடைபெறும் இந்த விழாவிற்கு கொடியை கள்ளிமேட்டை சேர்ந்த இந்து குடும்பத்தினர் வழங்கினர். பின்னர் இமாம் சையது அலிமுனிர் தலைமையில் தர்கா வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி நடக்கிறது. இதற்கு இந்துகள் சந்தனக்குடம் எடுத்து பள்ளிவாசலுக்கு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com