திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகரம்: சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் கொள்ளை

கடைக்குள் கத்தியுடன் புகுந்த மர்ம ஆசாமி, காசாளரை மிரட்டி ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.
திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகரம்: சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் கொள்ளை
Published on

திருவள்ளூர்,

சென்னையை அடுத்த திருவள்ளூர் வடக்கு ராஜா தெருவில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இன்று பகல் சூப்பர் மார்க்கெட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கடைக்குள் கத்தியுடன் புகுந்த மர்ம ஆசாமி, காசாளரை மிரட்டி ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கடை ஊழியர்களும், பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com