பழனி முருகன் கோவிலில் நாளை தரிசன கட்டுப்பாடு

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவில்
Published on: 

பழனி,

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இந்தநிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பழனி கந்தசஷ்டி விழாவில் 15-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 3 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அனைத்து கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். இதனால் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் அன்று இரவு தங்கரத புறப்பாடும் நடைபெறாது" என்று கூறப்பட்டு இருந்தது.

X