

சென்னை,
தசரா பண்டிகையையொட்டி நாளை முதல் 25-ம் தேதி வரை சென்னை ஐகோர்ட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளைத் தாக்கல் செய்வது மற்றும் விசாரிப்பது குறித்து தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, அவசர வழக்குகளை அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யலாம். அந்த வழக்குகள் அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே. முத்துக்குமார், வி. லட்சுமிநாராயணன், என். செந்தில்குமார், என். ரமேஷ் ஆகியோர் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ஐ.ஆர்.சி.பி. முருகன், என். திலீப்குமார் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.