மதுரை ஐகோர்ட்டுக்கு வருகிற 25-ந்தேதி வரை தசரா விடுமுறை

மதுரை ஐகோர்ட்டுக்கு வருகிற 25-ந்தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது.
மதுரை ஐகோர்ட்டுக்கு வருகிற 25-ந்தேதி வரை தசரா விடுமுறை
Published on: 

25-ந்தேதி வரை விடுமுறை

தசரா பண்டிகையையொட்டி மதுரை ஐகோர்ட்டுக்கு வருகிற 25-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி வருகிற 23-ந்தேதி விடு முறை கால கோர்ட்டு செயல்படுகிறது. அன்றைய தினம் டிவிஷன் பெஞ்சில் நீதி பதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர் அனைத்து வகையான டிவி ஷன் பெஞ்ச் வழக்குகளையும் விசாரிக்கின்றனர்.நீதிபதி திலீப்குமார், தனிநீதிபதியின் விசாரணைக்கு உள்பட்ட அனைத்து அப் பீல் மனுக்களையும் விசாரிக்கிறார்.

டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு பின்பு நீதிபதி முருகன், அனைத்து வகையான கிரிமினல் வழக்குகளையும் விசாரிக்கிறார்.தடை உத்தரவு அல்லது இடைக்கால மனுக்களை கொண்ட, அவசர விசாரணை தேவைப்படும் வழக்குகள் மட்டுமே, குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும் விடுமு றைகால கோர்ட்டு அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு எந்தவொரு வழக்கும் ஏற் றுக்கொள்ளப்படாது. தடை உத்தரவு, இடைக்கால மனுக்கள் மற்றும் அவசர விசாரணை கோரும் வழக்குகள், அதற்கான ஆவணங்களுடன், 21.10.2026 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மதுரை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இணையவழியில் மனு

வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தல், நகல் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், ஆவணங்களைத் திரும்பப் பெறுதல் அல்லது மீண்டும் சமர்ப்பித் தல் மற்றும் உத்தரவு நகல்களைப் பெறுதல் போன்ற நடைமுறைகள் வழக்கம் போலவே பின்பற்றப்பட வேண்டும். 21.10.2026 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் இணையவழியில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தேதிக்கு பிறகு மிக அவசர மான சூழல் ஏதேனும் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விடுமுறைகால அமர்வு நீதிப திகளிடம் முறையிடலாம்.

எந்தச் சூழலிலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் விடுமு றைகால கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் அல்லது சிறப்பு அமர்வுகள் தேவைப்பட்டால், அவை தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப் படும். விடுமுறைக்கால நீதிபதிகளின் வீடுகளுக்குச் சென்று எந்தவொரு மனு வையும் சமர்ப்பிக்கக்கூடாது. மேலும் தசரா விடுமுறை நாட்களில் 'மதிய நேர அவசர மனுக்கள்' ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேற்கண்ட தகவலை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் இணையதளத்தில் வெளி யிட்டு இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com