தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 16 சட்டசபை தேர்தல் தேதிகள்

8-வது தேர்தல் முதல் தற்போது வரை (11-வது தேர்தல் நீங்கலாக) ஒரே கட்டமாகவும் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 16 சட்டசபை தேர்தல் தேதிகள்
Published on

சென்னை,

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சட்டசபை தேர்தல்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. தற்போது நடைபெற இருப்பது 17-வது சட்டசபை தேர்தல் ஆகும்.

முதல் தேர்தல் 9 கட்டங்களாகவும், 2-வது தேர்தல் 5 கட்டங்களாகவும், 3-வது தேர்தல் 4 கட்டங்களாகவும், 4 மற்றும் 5-வது தேர்தல் 3 கட்டங்களாகவும், 6, 7 மற்றும் 11-வது தேர்தல் 2 கட்டங்களாகவும், 8-வது தேர்தல் முதல் தற்போது வரை (11-வது தேர்தல் நீங்கலாக) ஒரே கட்டமாகவும் நடந்து வருகிறது.

இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை தேர்தல் தேதிகளை இனி பார்ப்போம்.

முதல் தேர்தல்: 1952-ம் ஆண்டு ஜனவரி 2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25-ம் தேதி (9 கட்டம்).

2-வது தேர்தல்: 1957-ம் ஆண்டு மார்ச் 1, 4, 6, 8, 11-ம் தேதி (5 கட்டம்).

3-வது தேர்தல்: 1962-ம் ஆண்டு பிப்ரவரி 17, 19, 21, 24-ம் தேதி (4 கட்டம்).

4-வது தேர்தல்: 1967-ம் ஆண்டு பிப்ரவரி 5, 18, 21-ம் தேதி (3 கட்டம்).

5-வது தேர்தல்: 1971-ம் ஆண்டு மார்ச் 1, 4, 7-ம் தேதி (3 கட்டம்).

6-வது தேர்தல்: 1977-ம் ஆண்டு ஜூன் 12, 14-ம் தேதி (2 கட்டம்).

7-வது தேர்தல்: 1980-ம் ஆண்டு மே 28, 31-ம் தேதி (2 கட்டம்).

8-வது தேர்தல்: 1984-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி (ஒரே கட்டம்).

9-வது தேர்தல்: 1989-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி (ஒரே கட்டம்).

10-வது தேர்தல்: 1991-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி (ஒரே கட்டம்).

11-வது தேர்தல்: 1996-ம் ஆண்டு ஏப்ரல் 27, மே 2-ம் தேதி (2 கட்டம்).

12-வது தேர்தல்: 2001-ம் ஆண்டு மே 10-ம் தேதி (ஒரே கட்டம்).

13-வது தேர்தல்: 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி (ஒரே கட்டம்).

14-வது தேர்தல்: 2011-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி (ஒரே கட்டம்).

15-வது தேர்தல்: 2016-ம் ஆண்டு மே 16-ம் தேதி (ஒரே கட்டம்).

16-வது தேர்தல்: 2021-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி (ஒரே கட்டம்).

17-வது தேர்தல்: 2026-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி (ஒரே கட்டம்).

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com