"கண்ணை மறைத்த கள்ள உறவு" மகள்- ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

ஞானசேகரின் மனைவி சலைத்ராணிக்கும் கருப்பசாமி என்ற கார்த்திக்கிற்கும் இடையே நீண்டகாலமாக கள்ளஉறவு இருந்து வந்துள்ளது.
"கண்ணை மறைத்த கள்ள உறவு" மகள்- ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
Published on

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகில் உள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது. இதுகுறித்து பசுவந்தனை போலீஸ் நிலைய போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயில் எரிந்து கொண்டிருந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தீயிட்டு எரிக்கப்பட்டவர் கோவில்பட்டி அருகேயுள்ள குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பது தெரியவந்தது.

மீன் வியாபாரம் செய்து வந்த அவரின் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குருவிநத்தத்திலுள்ள ஞானசேகரின் வீட்டிற்குச் சென்ற போலீசார், ஞானசேகரின் மனைவி சலைத்ராணி மற்றும் அவர்களது 15, 14 வயது மகள்களிடம் விசாரித்தனர். விசாரணையில் மூவரும் மூன்று வித காரணங்களைச் சொல்லியுள்ளனர். அவர்களது பதிலும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்துள்ளது.

அவரின் மனைவி சலைத்ராணியிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை செய்ததில், அதே ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான கருப்பசாமி என்ற கார்த்திக் மற்றும் தனது மூத்த மகளுடன் இணைந்து கணவரை அடித்துக் கொலை செய்ததுடன், உடலை தீயிட்டுக் கொளுத்தியதையும் ஒத்துக் கொண்டார்.

கார்த்திக் மற்றும் சலைத்ராணியின் மூத்த மகளும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து போலீசா கார்த்திக், சலைத்ராணி, சலைத்ராணியின் 15 வயது மகள் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ஞானசேகரின் மனைவி சலைத்ராணிக்கும் கருப்பசாமி என்ற கார்த்திக்கிற்கும் இடையே நீண்டகாலமாக கள்ளஉறவு இருந்து வந்துள்ளது. மீன் வியாபாரியான ஞானசேகரன் தினமும் இரவில் தூத்துக்குடிக்குச் சென்று மினிலாரியில் மீன் வாங்கி வந்து மறுநாள் காலையில் டூவீலரில் பசுவந்தனை சுற்று வட்டார கிராமங்களுக்குச் சென்று மீன் வியாபாரம் செய்து வருவது வழக்கமாம்.

இரவில் மீன் வாங்கச் செல்லும் போதும், பகலில் வியாபாரத்திற்காக வெளியில் செல்லும் நேரத்திலும் கார்த்திக், சலைத்ராணி வீட்டிற்கு வந்து இருவரும் தனிமையில் இருப்பது வழக்கமாம். இந்த நிலையில், சலைத்ராணியின் 15 வயது மூத்த மகளை காதலிப்பதாகச் சொல்லி 6 மாதமாகப் பேசிப்பழகி வந்துள்ளார்.

இது சலைத்ராணிக்கு தெரிய வர, முதலில் கோபப்பட்டுள்ளார். பிறகு தனது மகளை கல்யாணம் செய்தால் கடைசி வரையிலும் தானும் தொடர்பில் இருக்கலாம் என நினைத்து இருவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சலைத்ராணியுடனான தொடர்பும், மகளுடனான காதலும் ஞானசேகரனுக்கு சில நாட்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது. கார்த்திக்கையும், சலைத்ராணியையும் ஞானசேகரன் கண்டித்துள்ளார்.

சில நாள்கள் கழித்து வீட்டில் சலைத்ராணியுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த ஞானசேகரன், இருவரையும் தாக்கியுள்ளார். ஆனால், சலைத்ராணி தன் மகளிடம், "நீ காதலிக்கிறது உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சு. உங்க அப்பா இருக்குற வரைக்கும் உங்களை ஒன்னு சேர விட மாட்டார்"எனச் சொல்லி ஞானசேகரைக் கொலை செய்ய சம்மதிக்க மூளைச்சலவை செய்திருக்கிறார்.

மூவரும் ஞானசேகரனைக் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு இரவில் பசுவந்தனை காட்டுப்பாதை வழியே தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஞானசேகரன் மீது காரை ஏற்றி கார்த்திக் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.

அதில், ஞானசேகரனுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துதான் நேற்று நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த ஞானசேகரனின் வாயைப் பொத்தி கம்பியால் அடித்துக் கொலை செய்து அவரின் உடலை சாக்கில் மூட்டையாகக் கட்டி அச்சங்குளம் காட்டுப்பகுதியில் போட்டு பெட்ரோல் ஊத்தி தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com