

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளுக்கு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த ரெகுநாதபுரம் அருகே உள்ள கொல்லந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58). இவரது இளைய மகள் முனீசுவரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கருப்பையா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வீட்டைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த மட்டை வேலி சரிந்து கிடந்ததால் அதனை கம்பியால் கட்டி ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மின் இணைப்பு மீட்டர் பெட்டி மீது கம்பி உரசியதாக தெரிகிறது. அப்போது கருப்பையாவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.