லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
Published on

சென்னை,

20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தமிழக ஆயுதப்படை போலீஸ் பிரிவின் இயக்குனராக செயல்பட்டு வரும் நிலையில் இந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கபட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி டிஜிபி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுளார்.

தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக ரெயில்வே ஐஜி பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன் சென்னை ஊர்க்காவல்படை ஏடிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்:-

Attachment
PDF
DIPR - IPS Transfers and Postings - Date.28.02.2026
Preview
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com