

குழித்துறை,
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் காங்கிரசார் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மார்த்தாண்டத்திலும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். அத்துடன் இளைஞர்கள் காங்கிரசார் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர்.
இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் மேலும் போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தீவிர விசாரணை நடத்தினர்.