நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ந் தேதி மதநல்லிணக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com