சிந்தனை நாள் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிந்தனை நாள் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
சிந்தனை நாள் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
Published on

தூசி

வெம்பாக்கம் அருகே வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று சாரண சாரணிய இயக்கம் சார்பில் சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவுல் பிறந்த நாளை சிந்தனை நாளாக கடைப்பிடித்தனர்.

இதையொட்டி சிந்தனை நாள் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

சைக்கிள் ஊர்வலத்தை உதவி தலைமை ஆசிரியர் செல்வம் தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் ரமேஷ், ஜெயபிரகாஷ், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாரணர் இயக்க ஆசிரியர் பாபு வரவேற்றார்.

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.

வடமணப்பாக்கம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சைக்கிள் ஊர்வலம் சென்றது.

பின்னர் சாரண- சாரணிய மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தின் உதவிக்கரங்களாய் மாறுவோம் நாட்டிற்கும் மக்களுக்கும் தொண்டாற்றுவோம் சமூக நல்லிணக்கத்தை பேணுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

மேலும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com