தீபம் ஏற்றக்கூடிய நாள் விரைவில் வரும்-நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

எனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறினார்.
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த தேரழுந்தூரில் தேரழுந்தூர் கம்பர் கழகம் சார்பில் கம்பர் விழா நடைபெற்றது. தேரழுந்தூர் கோட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல்நாள் நிகழ்வாக, ஆமருவியப்பன் கோவிலில் இருந்து கம்பர் கோட்டத்துக்கு ஊர்வலமாக வந்து, அங்கு மாணவர்களின் கம்பராமாயண பாராயணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டு கம்பனும் வைணவமும் என்ற நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது :- எனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியிலும் தீபம் ஏற்ற முடியவில்லை. வேண்டாம் என்று தடுத்து விட்டனர். பரவாயில்லை. தீபம் ஏற்றக்கூடிய நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






