மருத்துவமனையில் இருந்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் இன்று மாலை வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ்
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். இவருக்கு கடந்த 4 ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 92 வயதான தயாளு அம்மாளுக்கு வயது முதிர்வு காரணமாக மூச்சத்திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தயாளு அம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறுநாள் நேரில் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதேபோன்று மு.க அழகிரியும் நேரில் சென்று பார்வையிட்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதேபோன்று கருணாநிதி குடும்பத்தினர் பலரும் தயாளு அம்மாளு உடல்நலம் குறித்து ஆஸ்பத்திரிக்கு வந்து கேட்டறிந்தனர்.

தயாளு அம்மாளுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் நலமுடன் வீடு திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com