

சென்னை,
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நாளை (அக்.17) பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராமேஸ்வரத்தில் இருந்து நாளை (அக்.17) காலை 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06035) இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
22 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரெயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.