ஓசூர் அருகே கார் மோதி புள்ளிமான் செத்தது

ஓசூர் அருகே கார் மோதி புள்ளிமான் செத்தது
Published on

ஓசூர்:

ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று கிருஷ்ணகிரி-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த கார் மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த மான் துடித்து துடித்து உயிரிழந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் இறந்த மானை வனத்துறை அலுவலக வளாகத்தில் குழிதோண்டி புதைத்தனர். தொடர்ந்து மான் மீது மோதிய கார் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com