வேப்பனப்பள்ளி அருகேகிணற்றில் கட்டிட மேஸ்திரி பிணம்

வேப்பனப்பள்ளி அருகேகிணற்றில் கட்டிட மேஸ்திரி பிணம்
Published on

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே கட்டிட மேஸ்திரி கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆண் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சின்னபூதிமுட்லு பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரது கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்து வேப்பனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

அடையாளம் தெரிந்தது

விசாரணையில் பிணமாக கிடந்தவர் உடல் அடையாளம் தெரிந்தது. அதாவது, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராமசாமி மகன் சிவா (வயது 27) என்பது தெரிய வந்தது. அவர், கட்டிட மேஸ்திரியாகவும் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் சிவா உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com