பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் முதியவர் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்
Published on

விழுப்புரம், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்த அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com