பூட்டிய வீட்டில் முதியவர் பிணம்

பாளையங்கோட்டையில் பூட்டிய வீட்டில் முதியவர் பிணமாக கிடந்தார்.
பூட்டிய வீட்டில் முதியவர் பிணம்
Published on

பாளையங்கோட்டை கோட்டூர் சாலை அருகே உள்ள சிறுகுறிப்பு தொண்டர் நயினார் தெருவை சேர்ந்தவர் ஜான் தேவசகாயம் (வயது 65). இவரது வீட்டின் கதவு கடந்த 4 நாட்களாக பூட்டியே இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர். அங்கு ஜான் தேவசகாயம் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆலங்குளம் பஞ்சாயத்தில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுக்கு மேலாக இந்த வீட்டில் தனியாக இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com