ராமேசுவரம் கடற்கரையில் ஆங்காங்கே இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கையாகவே அதிக அளவில் மீன்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
ராமேசுவரம் கடற்கரையில் ஆங்காங்கே இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. விசைப்படகு, நாட்டுப்படகு, சிறியவத்தை மற்றும் கரைவலை உள்ளிட்டவைகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கையாகவே அதிக அளவில் மீன்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனிடையே ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆங்காங்கே கடந்த 2 நாட்களாக ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. குறிப்பாக கம்பிப்பாடு. அரிச்சல் முனைக்கு இடைப்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் பல இடங்களில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன. கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் மீன்களை அங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளும் பார்த்து செல்கின்றனர்.

கரை ஒதுங்கும் மீன்கள்

இது குறித்து தனுஷ்கோடி மீனவர்கள் கூறும் போது, தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் ஊமை கிளாத்தி மீன்கள். இவை கோழி தீவனத்திற்கு கேரளாவிற்கு அதிக அளவுக்கு அனுப்பப்படும். இந்த மீன்களை மீனவர்கள் அதிக அளவு சாப்பிட மாட்டார்கள். கோழி தீவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது கிலோ ரூ.15-க்கு விலை போகின்றது. கடலின் மேல் பரப்பில் இந்த மீன்களை அதிகம் காணலாம். கடல் நீரோட்ட வேகம், சீற்றத்தால் கரை ஒதுங்குகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com