இறந்து கரை ஒதுங்கிய விஷத்தன்மை மீன்கள் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் பேத்தை மீன்கள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்து கரை ஒதுங்கிய விஷத்தன்மை மீன்கள் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
Published on

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரத்தில் பேத்தை மீன்கள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் குந்துகால் கடற்கரையில், சில தினங்களாக அதிக அளவில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. குறிப்பாக பேத்தை மீன்கள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

இந்த மீன்கள் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார கேடு ஏற்படலாம் என அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் பேத்தை மீன்களில் முள் குத்தினால், உயிரிழப்பு அபாயம் ஏற்படும் எனவும் அஞ்சும் அவர்கள், மீன்கள் உயிரிழப்பதற்கு காலநிலை மாற்றம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மீன்வளத்துறை விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com