அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

2025-ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை டிசம்பர் 31, 2026 வரை தாக்கல் செய்யலாம். அதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
Published on: 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் IFHRMS இணையதளம் மூலம் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது கடந்த ஆண்டுக்கான சொத்து விவரத்தை 31.10.2026-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு ஊழியர் அமைப்புகள் கால நீட்டிப்பு கோரியதால், அரசு காலத்தை மேலும் 2 மாதம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 2025-ம் ஆண்டுக்கான சொத்து கணக்கை டிசம்பர் 31, 2026 வரை தாக்கல் செய்யலாம். அதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், டிஎன்பிஎஸ்சி, உயர்நீதிமன்ற பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு அலுவலர்களும் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதை தெரிவித்து, நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் தவறாமல் தாக்கல் செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தாக்கல் செய்யாதவர்கள் நன்னடத்தை விதியை மீறியதாக கருதப்படுவர் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

X