மாணவிகளிடம் பாலியல் பேரம்: நிர்மலாதேவி வழக்கில் வருகிற 26-ந் தேதி தீர்ப்பு

மாணவிகளிடம் பாலியல் பேரம் தொடர்பான பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 26-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
மாணவிகளிடம் பாலியல் பேரம்: நிர்மலாதேவி வழக்கில் வருகிற 26-ந் தேதி தீர்ப்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக நிர்மலாதேவி வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் வருகிற26-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com