

சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல் ஏ.வான என்.நன்மாறன் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் என்.நன்மாறனின் மறைவிற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர். இலக்கிய நயத்தால் மேடைக் கலைவாணர் எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்.
என் இனிய நண்பர் நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்' என தெரிவித்துள்ளார்.